என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  மதுரையில் கல்லூரி மாணவியிடம் நகை - பணம் மோசடி: வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் கல்லூரி மாணவியிடம் நகை, பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
  மதுரை:

  மதுரை வில்லாபுரம் மகாலிங்கம் சாலையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் விக்னேஷ் (வயது 21). இவருக்கும் மதுரை தனியார் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

  விக்னேஷ் அந்த மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலை யில் மாணவியிடம் “எனக்கு பணக்கஷ்டம் உள்ளது, எனவே நீ பணம் மற்றும் நகை கொடுத்து உதவ வேண்டும்“ என்று விக்னேஷ் கேட்டுள்ளார்.

  இதையடுத்து அந்த மாணவி, தான் அணிந் திருந்த நகை மற்றும் பணத்தை கொடுத்துள்ளார். ஒரு மாதத்தில் திருப்பித் தருவதாக உறுதி அளித் திருந்த நிலையில், விக்னேஷ் நகை மற்றும் பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார்.

  இதுதொடர்பாக கல்லூரி மாணவி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேசிடம் விசாரணை நடத்தினர்.

  அப்போது அவர் மாணவியிடம் நகை, பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து தெப்பக்குளம் போலீசார் விக்னேஷை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×