என் மலர்

  செய்திகள்

  தனது சொந்த செலவில் உணவளிக்கும் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி
  X
  தனது சொந்த செலவில் உணவளிக்கும் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி

  நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்களுக்கு தினசரி உணவளிக்கும் இன்ஸ்பெக்டர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வருபவர்கள் உள்பட பலருக்கு இன்ஸ்பெக்டர் உணவளித்து வருகிறார்.
  நத்தம்:

  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜமுரளி. இவர் போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்கள், இளைஞர்கள், போலீசாருடன் இணைந்து பணியாற்றும் தன்னார்வலர்கள், நண்பர்கள் குழு, ஊர்க்காவல்படை மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு தினமும் உணவளித்து வருகிறார்.

  இதற்காக போலீஸ் நிலையத்துக்கு பின்புறம் உள்ள பழைய கட்டிடத்தில் சைவ உணவு, கூட்டு, பொறியல், அப்பளம் பாயாசத்துடன் உணவு தயாரிக்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்பகுதியில் பலர் வேலை இழந்துள்ளனர். இந்த சூழ்நிலையிலும் தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த தன்னார்வலர்கள் தினந்தோறும் மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர்.

  பொருளாதார சூழ்நிலை காரணமாக அவர்களுக்கு உணவு கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே இதுபோன்ற நபர்களுக்கும், போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வருபவர்களுக்கும் இன்ஸ்பெக்டர் தனது சொந்த செலவில் உணவு தயார் செய்து வழங்கி வருகிறார். இது இப்பகுதி மக்களின் வெகுவான பாராட்டை பெற்றுள்ளது.

  Next Story
  ×