search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    குமரியில் ஒரே நாளில் 5 பேர் அனுமதி - கொரோனா வார்டில் 43 பேருக்கு சிகிச்சை

    குமரியில் நேற்று ஒரேநாளில் 5 பேர் கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதையடுத்து, வார்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    ஆசாரிப்பள்ளம் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 35 பேர் பூரணகுணமடைந்து வீடு திரும்பினார்கள். கொரோனா வார்டில் 38 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று குளச்சல் ரீத்தாபுரத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களது உறவினர்கள் 5 பேர் சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்தனர். ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் அவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. இதில் கணவன், மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னையில் இருந்து தேங்காய்பட்டணத்திற்கு வந்த 15 வயது சிறுவன் ஒருவனுக்கும், நாகர்கோவில் அனந்தநாடார் குடியை சேர்ந்த கணவன் - மனைவி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து இவர்களும் ஆசாரிப்பள்ளம் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டு உள்ளனர். நேற்று ஒரேநாளில் 5 பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டதையடுத்து கொரோனா வார்டில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

    அந்தமானில் இருந்து கப்பல் மூலமாக சென்னைக்கு அழைத்துவரப்பட்டவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினார்கள். அந்தமானில் இருந்து வந்த குமரி மாவட்டம் தூத்தூர், வள்ளவிளை பகுதியை சேர்ந்த 13 மீனவர்கள் சென்னையில் இருந்து அரசு பஸ் மூலமாக குமரி மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

    இன்று காலை ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிக்கு வந்துசேர்ந்த அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர்கள் அங்குள்ள கல்லூரி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் வசித்துவந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்பிய பிறகு அந்த பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது.

    மயிலாடி, கேரளபுரம் பகுதிகளில் இருந்து சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்பியதை அடுத்து இரு பகுதிகளிலும் இன்று முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன.

    ஆனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர் வசித்து வரும் வீட்டை சுற்றி உள்ள 10 வீடுகளில் மட்டும் கட்டுப்பாடுகள் இன்னும் 14 நாட்கள் நீட்டிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×