என் மலர்

  செய்திகள்

  அரசு பேருந்து
  X
  அரசு பேருந்து

  விழுப்புரம் கோட்டத்தில் 50 சதவீத பஸ்கள் இயக்கம் - பயணிகள் வருகை குறைவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊரடங்கு தளர்வை தொடர்ந்து விழுப்புரம் பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்ட போதும் பயணிகளின் குறைவாகவே இருந்ததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
  விழுப்புரம்:

  நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு நிபந்தனைகளுடன் தளர்வுகள் அளிப்பதை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

  இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 50 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதித்தது.

  அதன்படி தமிழகத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள போக்குவரத்து கழக பணிமனையில் நின்ற பஸ்களை சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது.

  அதனை தொடர்ந்து இன்று காலை முதல் பஸ்கள் இயங்க தொடங்கியது. விழுப்புரம் கோட்டத்தில் இருந்து திருவண்ணாமலை, திருக்கோவிலூர், செஞ்சி, ஆரணி, கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. அதேபோல் விழுப்புரம் நகர எல்லையான ஒலக்கூர் பகுதிக்கும் பஸ்கள் இயங்கியது.

  விழுப்புரம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையங்களில் பயணிகளின் வருகை வெகு குறைவாகவே காணப்பட்டது. பொதுவாக பஸ்கள் இயங்கி வந்த நாட்களில் விழுப்புரம் பஸ் நிலையம் பொதுமக்கள் கூட்டத்துடன் பரபரப்புடன் காணப்படும்.

  ஊரடங்கு தளர்வை தொடர்ந்து விழுப்புரம் பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்ட போதும் பயணிகளின் குறைவாகவே இருந்ததால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

  பஸ்சில் பயணம் செய்ய பயணிகள் முககவசம் அணிந்திருந்தனர். தெர்மா மீட்டர் மூலம் பரிசோதிக்கப்பட்டது. மேலும் பயணிகளுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. அதேபோல் டிரைவர்-கண்டக்டர்கள் முககவசம், கையுறை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

  ஒவ்வொரு பஸ்சிலும் பயணிகள் பின்பக்கமாக ஏறவும், முன்பக்கமாக இறங்கி செல்லவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் போக்குவரத்து இரவு 9 மணிவரை இயங்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  Next Story
  ×