search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி
    X
    சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி

    சிங்கம்பட்டி ஜமீன் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 200 பேர் மீது வழக்கு

    ஊரடங்கை மீறி சிங்கம்பட்டி ஜமீன் இறுதிச் சடங்கில் பங்கேற்ற 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள சிங்கம்பட்டி ஜமீன் ராஜாவாகவும், இந்தியாவில் முடிசூட்டப்பட்ட கடைசி ராஜாவாகவும் இருந்த முருகதாஸ் தீர்த்தபதி (வயது 89). நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு நேற்று மாலை சிங்கம்பட்டி ஜமீனில் நடந்தது.

    இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர் கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்கில் தடை உத்தரவையும் மீறி நூற்றுக்கணக்கானவர்கள் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் நடந்து சென்றனர்.

    இதுதொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி 200 பேர் மீது தடையை மீறி கூட்டமாக சென்றதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×