search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த டிரைவர்களை படத்தில் காணலாம்.
    X
    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த டிரைவர்களை படத்தில் காணலாம்.

    நிவாரணத்தொகை கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் டிரைவர்கள் மனு

    நிவாரணத்தொகை கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத் தில் டிரைவர்கள் மனு கொடுத்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட டி.என். ஆல் டிரைவர்ஸ் அசோசியேஷனின் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில், டிரைவர்கள் நேற்று மதியம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜராஜனிடம் ஒரு மனு கொடுத்தனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் எங்கள் சங்கத்தில் உள்ள டிரைவர்கள் யாரும் வேலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் டிரைவர்களின் வாழ்வாதா ரம் முழுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. எனவே எங்கள் சங்கத்தில் உள்ள டிரைவர் களுக்கு அரசின் நலத்திட்டங் கள் மற்றும் நிவாரணத்தொகை கிடைக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று கூறியிருந்தனர்.

    அப்போது சங்கத்தின் செயலாளர் விஜய், பொருளாளர் ஜெயராஜ், செய்தி தொடர்பாளர் ரெங்கநாதன் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.

    இதே போல் பெரம்பலூர் மாவட்ட 3 பிளஸ் 1 ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுனர்கள் தொழி லாளர்கள் சங்கத்தின் தலை வர் சண்முகம் தலைமையில் டிரைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் ஊரடங்கு உத்தரவி னால் வருமானம் இழந்த நலவாரியத்தில் பதிவு செய் யாத ஆட்டோ டிரைவர்கள், அனைத்து வகையான டிரை வர்களுக்கும் பாகுபாடின்றி நிவாரண தொகை அரசு வழங்க வேண்டும். ஊரட்கு வழிமுறைகளை உட்பட்டு ஷேர் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண் டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களில் டிரைவர்கள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காப்பீடு, எப்.சி. சாலை வரி உள்ளிட்ட கட்டணங்களை தள்ளுபடி செய்ய வேண்டும். டிரைவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.15 ஆயிரமும் மற்றும் உணவு பொருட்கள் வழங்கிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
    Next Story
    ×