search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    குமரியில் பாதிப்பு 51 ஆக உயர்வு - வெளியூர்களில் இருந்து வந்த 33 பேருக்கு கொரோனா

    குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்தது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் 31-ந்தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5 பேர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இவர்களின் உறவினர்களை சுகாதார துறையினர் சோதனை செய்த போது அவர்களில் 11 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களும் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்த 16 பேரும் சிகிச்சையில் இருந்து குணமாகி வீடு திரும்பியநிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு ஏராளமானோர் வரத்தொடங்கினர்.

    அவர்கள், ஆரல்வாய் மொழியில் சோதனைச்சாவடி யில் பரிசோதனை செய்த பிறகே வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

    இதில் சென்னையில் இருந்து குமரி வந்த மைலாடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலியானார். 3 பேர் சென்னை மற்றும் கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்களை தவிர கடந்த 7-ந்தேதி வெளியூரில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதில் 5 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். ஒருவர் மட்டும் தற்போது கொரோனா வார்டில் சிகிச்சையில் உள்ளார்.

    மாலத்தீவு, பாண்டிச்சேரி, சென்னையில் இருந்து வந்த 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். இவர்களையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 50-ஐ தாண்டியது.

    இதற்கிடையே சென்னையில் இருந்து பஸ்சில் குமரி மாவட்டம் வந்த ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் வந்த 2 பேர் ஆசாரி பள்ளம் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் ஆசாரிபள்ளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர் ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதனால் பாதிப்பு எண்ணிக்கை 51 ஆக அதிகரித்தது.

    குமரி மாவட்டம் முழுவதும் களப்பணியாளர்கள் மூலமும் ஆரல்வாய்மொழி சோதனைச்சாடியிலும் இதுவரை 10,199 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    49 பேரில் 16 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 33 பேர் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வந்தவர்கள் ஆவார்கள். 9,927 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மீதமுள்ள நபர்களின் பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×