search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் - கோப்புப்படம்
    X
    கொரோனா வைரஸ் - கோப்புப்படம்

    கொரோனா தொற்று பாதிப்பு: மதுரையில் போலீஸ்காரர் வசித்த பகுதிக்கு சீல் - பொதுமக்கள் செல்ல தடை

    கொரேனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போலீஸ்காரருடன் பணியாற்றிய சில போலீஸ்காரர்களுக்கும், அவர் வசித்த பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    கொரோனா தொற்று பாதிப்பை தடுக்க மத்திய - மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகின்றன. இருப்பினும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை.

    மதுரையில் இதுவரை ஒரே நாளில் 15 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்ததுதான் அதிக எண்ணிக்கையாக இருந்தது.

    ஆனால் நேற்று ஒரே நாளில் 26 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறை அறிவித்தது. இந்த 26 பேரில் மதுரை தெப்பக் குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரரும் ஒருவர்.

    மேலும் 5 கர்ப்பிணிகளும் இந்த பட்டியலில் அடங்கும். நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனை வரும் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

    நேற்று கொரேனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போலீஸ்காரருடன் பணியாற்றிய சில போலீஸ்காரர்களுக்கும், அவர் வசித்த சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. தடுப்பு கட்டைகள் வைத்து அடைத்துள்ளனர். பொதுமக்கள் யாரும் அந்த பகுதிக்கு சென்று விடாமல் தடுக்க போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நேற்று கொரோனாவால் வாதிக்கப்பட்ட அனைவரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிசசை அளிக்கபப்டுகிறது.
    Next Story
    ×