search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் சூரமங்கலம் அம்மா உணவகத்தில் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. ஆய்வு
    X
    சேலம் சூரமங்கலம் அம்மா உணவகத்தில் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. ஆய்வு

    சேலம் சூரமங்கலம் அம்மா உணவகத்தில் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. ஆய்வு

    சேலம் சூரமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகளின் தரம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
    சேலம்:

    சேலம் சூரமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் வழங்கப்பட்டு வரும் உணவுகளின் தரம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கி, தரம் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் தேவைக்கேற்ற உணவை பெற்று பயன்பெறுமாறும், வெளியில் வரும்போது அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். பின்னர் அவர்கள் 2 பேரும் அம்மா உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டனர்.

    இது குறித்து ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. கூறும்போது, சேலம் மாவட்டம் மற்றும் மாநகர அ.தி.மு.க. சார்பில் 15 அம்மா உணவகத்தில் கடந்த 3-ந் தேதி வரை இலவசமாக உணவுடன் முட்டையும் வழங்கி வந்தோம். தற்போது வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு தொடர்வதாலும் அது வரை அம்மா உணவகத்தில் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்றார். இந்த ஆய்வின்போது செவ்வாய்ப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் ராம்ராஜ், மாநகர பொறியாளர் அசோகன், உதவி ஆணையாளர் செல்வராஜ், உதவி வருவாய் அலுவலர் பார்த்தசாரதி, உதவி பொறியாளர் அன்புசெல்வி, வருவாய் ஆய்வாளர்கள் சண்முகம், தமிழ்மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×