என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  புகையிலை பொருட்கள் விற்ற 2 மளிகைக் கடைகாரர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை அருகே புகையிலை பொருட்களை மளிகைக் கடையில் பதுக்கி வைத்து விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
  வல்லம்:

  தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் நேற்று கள்ளப்பெரம்பூர் சப்- இன்ஸ்பெக்டர் அபானா அஞ்சும் மற்றும் போலீசார் தஞ்சை அருகே உள்ள ரெட்டிப்பாளையம் பகுதியில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து ரெட்டிப்பாளையத்தில் உள்ள 2 மளிகை கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

  2 மளிகை கடைகளிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர்களான பாலு (வயது45), ரவி(60) ஆகியோரை கைது செய்தனர்.

  Next Story
  ×