search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
    X
    அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

    கோவில்களில் பணியாற்றும் 517 பேருக்கு இலவச அரிசி- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கினார்

    கோவில்களில் பணியாற்றும் 517 நபர்களுக்கு தலா 20 கிலோ அரிசியை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியா பட்டி, இருக்கன்குடி உட்பட மாவட்டத்தில் உள்ள 75 இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள், ஒரு கால பூஜை மற்றும் கிராம கோயில் பூசாரிகள், கோவில்களில் பணி யாற்றும் பணியாளர்கள் என மொத்தம் 517 நபர்களுக்கு தலா 20 கிலோ அரிசியை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

    சமூக விலகலை கடைப்பிடிக்கும் நோக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சிவகாசி சிவன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், விருதுநகர் சிவன் கோவில்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள், பூசாரிகள், கோவில் பணியாளர்களுக்கு 20 கிலோ அரிசி பைகள் வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, ஆண்டாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவிச்சந்திரன், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சிந்து முருகன், புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட அறங்காவலர்குழு தவைர் பலராம், முன்னாள் நகர கழக செயலாளர் முத்துராஜ், நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமிபாண்டியன், சாத்தூர் ஒன்றிய கழக செயலாளர் சண்முகக்கனி, உள்பட ஒன்றிய, நகர கழக நிர் வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×