search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கோவையில் தடையை மீறியதாக 422 பேர் கைது

    கோவை புறநகர் மாவட்ட பகுதியில் 355 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    கோவை:

    கோவை மாநகராட்சி உள்பட கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநகராட்சிகளில் கடந்த 26-ந்தேதி முதல் நேற்று இரவு வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    மேலும் போலீசார் சார்பில் தடையை மீறி வாகனங்களில் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் 4-வது நாளான நேற்று கோவை மாநகரம் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. முக்கிய சாலைகளில் 1,500 மேற்பட்ட போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தடையை மீறி வெளியே சுற்றித் திரிபவர்கள் போலீசார் கைது செய்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வந்தனர். தினசரி 200-300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. ஆனால் நேற்று ஊரடங்கு உத்தரவு காரணமாக யாரும் வெளியே வராததால் மாநகர பகுதியில் ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கோவை புறநகர் மாவட்ட பகுதியில் 355 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 346 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்து 900 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×