என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறிய 5,480 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாக 5 ஆயிரத்து 480 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
  நாமக்கல்:

  நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி சுற்றி திரிபவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 197 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 158 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பெரும்பாலான வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் 2 பேர் பயணம் செய்தவை ஆகும்.

  நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,986 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், 5 ஆயிரத்து 480 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், 2,934 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
  Next Story
  ×