search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்ப்பிணிக்கு உதவிய போக்குவரத்து ஆய்வாளர்.
    X
    கர்ப்பிணிக்கு உதவிய போக்குவரத்து ஆய்வாளர்.

    வெயிலில் நடந்து வந்த கர்ப்பிணிக்கு வாகனம் தந்து உதவிய போக்குவரத்து ஆய்வாளர்

    வெயிலில் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்ணை வாகனத்தில் ஏற்றி பத்திரமாக வீட்டுக்கு அனுப்பிய போக்குவரத்து ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
    பெரம்பலூர்:

    பெரம்பலுர் மாவட்ட காவல் துறையினர் மதிய வேளையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கர்ப்பிணி பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

    அங்கிருந்த நகர போக்குவரத்து ஆய்வாளர் கோபிநாத் அந்த பெண்ணை நிறுத்தி விசாரித்தார். அதற்கு அந்த பெண், தான் மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருப்பதாக கூறினார். 

    கடும் வெயிலில் கர்ப்பிணி பெண் நடந்து செல்வதை கண்ட அந்த ஆய்வாளர் உடனடியாக தனது உதவியாளரை கூப்பிட்டார். அந்த பெண்ணை பத்திரமாக வீட்டில் விட்டு வருமாறு தனது வாகனத்தையும் கொடுத்து உதவினார். இதைத்தொடர்ந்து, அந்தப் பெண் அவரது வாகனத்தில் ஏறி வீடு போய்ச் சேர்ந்தார். 

    கடும் வெயிலில் நடந்து சென்ற கர்ப்பிணி பெண்ணை பத்திரமாக அழைத்துச் சென்று அவரது வீட்டில் சேர்த்த போக்குவரத்து ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

    இச்சம்பவம் பெரம்பலூர் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
    Next Story
    ×