என் மலர்

  செய்திகள்

  தீவிபத்து
  X
  தீவிபத்து

  சென்னை பாரிமுனை எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீ விபத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை பாரிமுனை சந்திப்பில் அடுக்கு மாடிகளை கொண்ட எல்.ஐ.சி. கட்டிடத்தில் இன்று மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
  சென்னை:

  சென்னை பாரிமுனை சந்திப்பில் அடுக்கு மாடிகளை கொண்ட எல்.ஐ.சி. கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இதில் இன்று காலை 5.30 மணி அளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

  உடனடியாக 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 7 வாகனங்களில் விரைந்து சென்றனர். எல்.ஐ.சி. கட்டிடத்தில் 4-வது மாடியில் தீ மளமளவென பரவியது. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

  5-வது மாடியில் எல்.ஐ.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு தீ பரவியதில் பல ஆவணங்களும் எரிந்து சாம்பலாகி இருப்பதாக கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததால் அருகில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
  Next Story
  ×