search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்குப்பதிவு - கோப்புப்படம்
    X
    வழக்குப்பதிவு - கோப்புப்படம்

    கோவை, திருப்பூரில் முழு ஊரடங்கு தடையை மீறிய 641 பேர் மீது வழக்கு

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 641 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 586 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது
    கோவை:

    தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் வருகிற 29-ந் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவிர திருப்பூர், சேலம் மாநகராட்சிகளில் வருகிற 28-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவை, திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

    மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து மாநகருக்குள் நுழையும் அனைத்து சாலைகளும் தடுப்புகள் அமைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கோவை, திருப்பூர் பகுதிகளில் ட்ரோன் கண்காணிப்பு கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவை மாநகராட்சி பகுதியில் தடையை மீறி சென்ற 5 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் கோவை புறநகர் மாவட்டத்தில் தடையை மீறிய 370 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 426 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 357 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கோவை மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 375 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 431 பேர் கைது செய்யப்பட்டனர். 360 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தடையை மீறி சென்ற 145 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் 122 மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல் திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் தடையை மீறிய 121 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் 104 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 266 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 226 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 641 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 586 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் முழு ஊரடங்கின் 2-ம் நாளான இன்று காலை திருப்பூர் போலீசார் ரோந்துப்பணி மேற்கொண்ட போது, திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, கே.பி.என். காலனி பகுதிகளில் 20 பேர் நடைப் பயிற்சி மேற்கொண்டனர். அவர்களை பிடித்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் தொற்று நோய்ப்பரவல் தடுப்புச்சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.
    Next Story
    ×