search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மளிகை பொருள்
    X
    மளிகை பொருள்

    பேராவூரணியில் மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்பதால் பொதுமக்கள் வேதனை

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்பதால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.
    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் மளிகை பொருட்களை அதிக விலைக்கு விற்பதால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

    கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பேராவூரணியில் உள்ள மளிகை கடைகளில் ஒவ்வொரு பொருளின் விலையும் ஒரு கிலோவுக்கு குறிப்பிட்ட விலையை விட கூடுதலாக ரூபாய் 20 முதல் 30 வரை அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

    இதனால் பேராவூரணியில் பொருளை வாங்கி கிராமப் பகுதியில் விற்பனை செய்யும் சின்ன கடைகளில் இன்னும் கூடுதலாக விற்கப்படுவதாக கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

    அவற்றின் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. மருந்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய கண்காணிப்பு குழுக்களை அமைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×