search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்க்கெட்டில் நெருக்கமாக நின்று காய்கறி வாங்கும் மக்கள்
    X
    மார்க்கெட்டில் நெருக்கமாக நின்று காய்கறி வாங்கும் மக்கள்

    முழு ஊரடங்கு அறிவிப்பால் உணவுப் பொருட்கள் வாங்க கடைகளில் குவிந்த மக்கள்

    சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், தேவையான உணவுப் பொருட்களை வாங்கி வைப்பதற்காக மக்கள் கடைகளில் குவிந்தனர்.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

    கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, கோவை, மதுரையில் வைரஸ் தடுப்பு பணியை தீவிரப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதேபோல் சேலம், திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை 3 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

    இந்த முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    பொருட்கள் வாங்க வரிசையில் நிற்கும் மக்கள்

    அடுத்த 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைப்பதற்காக மக்கள் இன்று அதிக அளவில் கடைகளுக்கு வருகின்றனர். குறிப்பாக காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

    பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றும்படி வாடிக்கையாளர்களுக்கு உரிமையாளர்கள் அறிவுறுத்தி அதன்படி நிதானமாக பொருட்கள் விற்பனை செய்கின்றனர். 

    ஒருசில கடைகளில் மக்கள் எதையும் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக மார்க்கெட்டுகளில் மக்கள் நெருக்கமாக நின்று காய்கறிகளை வாங்குவதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாகி உள்ளது. 
    Next Story
    ×