என் மலர்

  செய்திகள்

  விஷம்
  X
  விஷம்

  வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாததால் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே வங்கி கடனை திருப்பி செலுத்த முடியாத சோகத்தில் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
  உத்தமபாளையம்:

  தேனி அருகே மயிலாடும்பாறை சிறைப்பாறையைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 52). தென்னை விவசாயம் செய்து வந்தார். விவசாய தேவைக்காக கம்பத்தில் உள்ள தனியார் வங்கியில் ரூ.12 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.

  இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதாளத்துக்கு சென்று விட்டதால் தென்னை மரங்கள் கருகத் தொடங்கின. இதனால் எதிர்பார்த்த விளைச்சல் இல்லை. இதன் காரணமாக கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக தர்மலிங்கத்திடம் கூறியுள்ளனர்.

  இதனால் மன உளைச்சலில் இருந்த தர்மலிங்கம் தோட்டத்துக்கு வந்தார். அங்கு கருகிய மரங்களை கண்டு கண்கலங்கி பின்னர் வி‌ஷம் குடித்து மயங்கினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

  இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தர்மலிங்கத்துக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
  Next Story
  ×