search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேனி தற்கொலை"

    தேனி அருகே மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தேனி:

    தேனி மாவட்டம் கோம்பை ஓடைத் தெருவைச் சேர்ந்தவர் மணி பிரபு (வயது 32). கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி மது குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனது தாயாரிடம் செலவுக்கு பணம் கேட்டார். அதற்கு அவர் கொடுக்க மறுத்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி மணிபிரபுவின் மனைவி நதியா கொடுத்த புகாரின் பேரில் கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    தேனி அருகே அழைப்பிதழில் தனது சகோதரர் பெயர் போடாததால் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தேனி:

    தேனி மாவட்டம் தேவாரம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி மீரா (வயது31). இவர்களது குழந்தைக்கு வருகிற 10-ந் தேதி காதணி விழா நடத்த உள்ளனர்.

    இதற்காக அழைப்பிதழ் அச்சடித்தனர். அதில் மீராவின் சகோதரர் பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து தனது கணவரிடம் மீரா கேட்டபோது அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவமதித்தார்.

    இதனால் மனமுடைந்த மீரா வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தம்பி பிரான்சிஸ் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி அருகே சகோதரனுடன் ஏற்பட்ட காதலால் திருமணமான 2-ம் நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    தேனி:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள புலிக்குத்தி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகள் ரம்யா (வயது 21). இவருக்கும் பெரியகுளம் சருத்துப்பட்டியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவருக்கும் கடந்த 11-ந் தேதி திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்ததும் விருந்துக்காக புதுமணத் தம்பதிகள் புலிக்குத்தி கிராமத்துக்கு வந்தனர். அப்போது திருப்பூரில் வேலை பார்த்து வரும் ரம்யாவின் சித்தப்பா மகன் முத்துகிருஷ்ணன் (27) என்பவரும் புதுமண ஜோடியை பார்க்க வந்தார்.

    விருந்து நடந்து கொண்டு இருந்தபோது அருகில் இருந்த ஒரு வீட்டில் புதுப்பெண் ரம்யாவும், முத்து கிருஷ்ணனும் வி‌ஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே ரம்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துகிருஷ்ணன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில் முத்துகிருஷ்ணனும், தங்கை உறவு முறை உள்ள ரம்யாவும் காதலித்து வந்துள்ளனர். இதனை பெற்றோர்கள் பல முறை எடுத்துச் சொல்லி அவர்களை பிரிக்க பார்த்தனர்.

    ஆனால் அவர்கள் தொடர்ந்து காதலித்து வந்ததால் ரம்யாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதனால் வேதனையடைந்த ரம்யாவும், முத்துகிருஷ்ணனும் வி‌ஷம் குடித்துள்ளனர் என்று தெரிவித்தனர்.
    ×