search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பழுதான லாரியை சரிசெய்ய வந்தபோது வேன் மோதி லாரி உரிமையாளர் பலி

    கோவை அருகே பழுதான லாரியை சரிசெய்ய வந்த போது எதிர்பாராதவிதமாக வேன் மோதிய விபத்தில் லாரி உரிமையாளர் பலியானார்.
    கோவை:

    சேலம் மாவட்டம் மேட்டூர் ஜீவாநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). லாரி உரிமையாளர். இவரது லாரி கோவை மதுக்கரையில் உள்ள ஒரு கம்பெனிக்கு லோடு ஏற்ற வந்தது. அங்கு திடீரென லாரி பழுதானது. லாரி டிரைவர் இது குறித்து மணிகண்டனுக்கு தெரிவித்தார்.

    மணிகண்டன் அதே பகுதியில் உள்ள மெக்கானிக் தினேஷ் (23) என்பவருடன் காரில் கோவைக்கு புறப்பட்டார். காரை தினேஷ் ஓட்டினார். கார் நேற்று மாலை மதுக்கரை போடி பாளையம் பிரிவில் வந்த போது பால் ஏற்றிய வேன் வந்தது. எதிர்பாராதவிதமாக கார் மீது வேன் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்தனர். இதில் லாரி உரிமையாளர் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். படுகாயத்துடன் தினேஷ் சிகிச்சை பெற்றுவருகிறார்.

    விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோன்று கோவை கோவில்பாளையம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் திருமூர்த்தி (45). இவர் நேற்று அதே பகுதியில் நடந்து சென்றார். அப்போது சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு ஒரு கார் வந்தது. திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து திருமூர்த்தி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திருமூர்த்தி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானர்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×