search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தர்ணா போராட்டம்

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் கட்டபொம்மன் சிலை முன்பாக இரவு நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய இஸ்லாமிய தலைவர்கள் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு குடியுரிமை திருத்த சட்ட மசோதா எந்தவகையிலும் பயன் பெறாது என்றும். மத்திய அரசு இஸ்லாமியர்களை ஒடுக்கும் விதமாகவே இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள் என்றும். பாரதிய ஜனதா கட்சி இந்திய நாட்டை இந்து நாடாக மாற்றும் முயற்சிக்கு இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாகவும். இது ஒரு போதும் நிறைவேறாது என்றும் இஸ்லாமியர்கள் இந்த சட்டம் திரும்பப் பெறும் வரை தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்துவோம் என்றும் கூறினர்.
    Next Story
    ×