search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல்- திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சம் வாக்காளர்கள்

    திருப்பூர் மாவட்டத்தில் 11 லட்சத்து 41 ஆயிரத்து 756 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 59 ஆயிரத்து 448 பெண் வாக்காளர்களும், 277 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 23 லட்சத்து ஆயிரத்து 481 வாக்காளர்கள் உள்ளனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டார். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் 11 லட்சத்து 41 ஆயிரத்து 756 ஆண் வாக்காளர்களும், 11 லட்சத்து 59 ஆயிரத்து 448 பெண் வாக்காளர்களும், 277 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 23 லட்சத்து ஆயிரத்து 481 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிப்பதற்காக மாவட்டத்தில் 2 ஆயிரத்து 484 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 17 ஆயிரத்து 692 பேர் அதிகமாக உள்ளனர். தொகுதி வாரியாக வாக்காளர்கள் எண்ணிக்கை வருமாறு:-

    தாராபுரம் தனி தொகுதியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 792 ஆண் வாக்களார்கள், 1 லட்சத்து 30 ஆயிரத்து 903 பெண் வாக்காளர்கள், 10 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 705 வாக்காளர்கள் உள்ளனர்.

    காங்கயம் தொகுதியில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 834 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 814 பெண் வாக்காளர்களும், 22 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 670 வாக்காளர்கள் உள்ளனர்.

    அவினாசி தனி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 405 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 40 ஆயிரத்து 464 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 20 பேர் என மொத்தமாக 2 லட்சத்து 74 ஆயிரத்து 889 பேர் உள்ளனர்.

    திருப்பூர் வடக்கு தொகுதியில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 705 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 79 ஆயிரத்து 89 பெண் வாக்காளர்களும், 95 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 3 லட்சத்து 65 ஆயிரத்து 889 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருப்பூர் தெற்கு தொகுதியில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 428 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 31 ஆயிரத்து 661 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 118 வாக்காளர்கள் உள்ளனர்.

    பல்லடம் தொகுதியில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 124 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 86 ஆயிரத்து 977 பெண் வாக்காளர்கள், 62 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3 லட்சத்து 74 ஆயிரத்து 163 வாக்காளர்கள் உள்ளனர்.

    உடுமலை தொகுதியில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 282 ஆண் வாக்களார்கள், 1 லட்சத்து 36 ஆயிரத்து 650 பெண் வாக்காளர்கள், 23 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 64 ஆயிரத்து 955 வாக்காளர்கள் உள்ளனர்.

    மடத்துக்குளம் தொகுதியில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 186 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 23 ஆயிரத்து 890 பெண் வாக்காளர்கள், 16 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 92 வாக்காளர்கள் உள்ளனர்.
    Next Story
    ×