search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சாவூர் ரெயில் நிலையம்
    X
    தஞ்சாவூர் ரெயில் நிலையம்

    குடமுழுக்கு விழா- தஞ்சை ரெயில் நிலையத்தில் கூடுதலாக 3 டிக்கெட் கவுண்டர்கள் திறப்பு

    தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கையொட்டி கூடுதலாக 3 டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டன. தற்போது 7 டிக்கெட் கவுண்டர்கள் செயல்பட்டு வருகிறது.
    தஞ்சாவூர்:

    இன்று காலை நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். லட்சக்கணக்கான பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள், ரெயில்கள் இயக்கப்பட்டன. ஏராளமான பயணிகள் ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    இதனால் தஞ்சை ரெயில் நிலையத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. இதே போல் குடமுழுக்கு நிகழ்ச்சி முடிந்த பின்னர் சிறப்பு பஸ் மற்றும் ரெயிலில் ஏறி தங்களது சொந்த ஊருக்கு சென்றனர்.

    இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக தஞ்சை ரெயில் நிலையத்தில் கூடுதலாக டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 4 கவுண்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர தானியங்கு எந்திரம் மூலமும் டிக்கெட் கொடுக்கப்படுகிறது. தற்போது குடமுழுக்கை யொட்டி கூடுதலாக 3 டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டன. தற்போது 7 டிக்கெட் கவுண்டர்கள் செயல்பட்டு வருகிறது.

    இதனால் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றியும், கூட்ட நெரிசலில் சிக்காமல் இருக்கவும் வழிவகை செய்யப்பட்டது. மேலும் அவர்கள் உரிய நேரத்தில் டிக்கெட் எடுத்து ரெயிலில் செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று பயணிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×