என் மலர்

  செய்திகள்

  பேஷன் ஷோவில் வண்ண உடைகளுடன் பங்கேற்ற செல்லபிராணிகள்.
  X
  பேஷன் ஷோவில் வண்ண உடைகளுடன் பங்கேற்ற செல்லபிராணிகள்.

  நாய், கிளி, பசுக்கள் பங்கேற்ற செல்லபிராணிகள் பே‌ஷன்ஷோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களை கொண்டு சுமார் 50 -க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்ட ‘செல்லப்பிராணிகள் பே‌ஷன் ஷோ 2020’ சென்னையில் நடத்தப்பட்டது.
  சென்னை:

  வீடற்ற தெரு விலங்குகள் நலனுக்காக நிதி திரட்டும் நோக்கில் ‘பீப்பிள் பார் அனிமல்’ உள்ளிட்ட அமைப்பினரால், பிரபலமான ஆடை வடிவமைப்பாளர்களை கொண்டு சுமார் 50 -க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்ட ‘செல்லப்பிராணிகள் பே‌ஷன் ஷோ 2020’ சென்னையில் நடத்தப்பட்டது.

  செல்லப் பிராணிகள் மற்றும் அவைகளின் உரிமையாளர்களை கருத்தில் கொண்டு நடத்தப்பட்ட இந்த பே‌ஷன் ஷோவில் நாய்கள், கிளிகள், மீன்கள் மற்றும் பசுக்கள் கலந்துகொண்டன.

  செல்லப்பிராணிகளுக்கான ஆடைகளை சென்னையின் புகழ்பெற்ற வடிவமைப்பாளர்களான சிட்னி ஸ்லேடன், டினா வின்சென்ட், ரிச்சா கோயிங்கா, சைதன்யா ராவ், நவோமி, விபா, தீபிகா, மற்றும் வாலன்டி ஆகியோர் வடிவமைத்திருந்தனர்.

  அவர்களது கைவண்ணத்தில் தயாரிக்கப்பட்ட ஆடைகளை உடுத்தி மிடுக்கான தோற்றத்தில், போட்டியில் பங்கேற்கும் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும், தங்களது செல்லப் பிராணிகளுடன் ரேம்ப் வாக் சென்றனர். 8 சுற்றுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் சமூக ஆர்வலர்களும், பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

  பேஷன் ஷோவில் பசு.

  மேலும், டச்சஸ் பிரண்ட்ஸ் ஆப்பியூரிஸ் குழுவின் நிறுவனர் நினா ரெட்டி தனது சிம்பா மற்றும் ஜூனியருடன் ரேம்ப் வாக்கில் அசத்தியதோடு மட்டுமல்லாமல் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையையும் பீப்பிள் பார் அனிமல் அமைப்பிற்கு வழங்கினார்.

  அதேபோல போட்டியாளர்கள் 5 ஆயிரம் ரூபாயை அன்பளிப்பாக அளித்தனர். மேலும், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக புகழ்பெற்றவர்களுகான போட்டியும் நடத்தப்பட்டது.
  Next Story
  ×