search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயிகள் வைத்துள்ள பதாகை.
    X
    விவசாயிகள் வைத்துள்ள பதாகை.

    எரிவாயு குழாய் பதிப்பது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டத்தை புறக்கணித்த விவசாயிகள்

    எரிவாயு குழாய் பதிப்பது தொடர்பாக விழிப்புணர்வு கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்தனர்.
    பொங்கலூர்:

    கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு தேவணகொந்தி வரை ரூ.720 கோடி மதிப்பீட்டில் நிலத்தடியில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்திற்காக விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்ல விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விவசாயிகளிடம் உள்ள அச்சத்தை போக்கும் விதமாக நேற்று முன்தினம் பொங்கலூரை அடுத்த அலகுமலையில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று கண்டியன்கோவில் ஊராட்சியில் விழிப்புணர்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாக விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக விழிப்புணர்வுக்கூட்டம் புறக்கணிப்பு என்ற பெயரில் பதாகை வைத்தனர். அதற்கு ஏற்றார்போல் இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால். காலையில் வந்த அதிகாரிகள் மாலை வரை காத்திருந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×