என் மலர்

  செய்திகள்

  டிஜிபி திரிபாதி
  X
  டிஜிபி திரிபாதி

  தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை - டிஜிபி திரிபாதி எச்சரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  சென்னை:

  பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து சர்ச்சையாக வெடித்தது. அவருக்கு எதிராக பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த சாலவாக்கம், களியப்பட்டியில் நேற்று இரவு மர்ம கும்பல் பெரியார் சிலையை உடைத்து சேதப்படுத்தி சென்றது. இதுதொடர்பாக, சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  இந்நிலையில், தலைவர்கள் சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்லார்.

  இதுதொடர்பாக, டிஜிபி திரிபாதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காஞ்சிபுரம் சாலவாக்கம் அருகே பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×