
காரமடை அருகே உள்ள பொன்னம்மாள் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பெட்டையன் (65) தொழிலாளி. இவர் நேற்று தனது இரு சக்கர வாகனத்தில் காந்தி நகர் பகுதியில் இருந்து காரமடைக்கு வந்து கொண்டிருந்தார். ஆசிரியர் காலனி அருகே வந்த போது கோவையில் இருந்து ஊட்டி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சின் முன் சக்கரத்தில் பெட்டையன் சிக்கி படுகாயம் அடைந்தார்.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் ஊட்டி அணிக்கொரை பகுதியை சேர்ந்த மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.