search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் ரஜினி ரசிகர்கள் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கினர்.
    X
    விழுப்புரத்தில் ரஜினி ரசிகர்கள் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கினர்.

    விழுப்புரத்தில் பொதுமக்களுக்கு கரும்பு வழங்கிய ரஜினி ரசிகர்கள்

    விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் பொங்கல் பண்டிகையொட்டி படம் பார்க்க வந்திருந்த பொதுமக்களுக்கு கரும்பு மற்றும் இனிப்புகள் வழங்கினர்.

    விழுப்புரம்:

    நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையிடப்பட்டது.

    இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் திரையிடலாம் என தமிழக அரசு அனுமதி அளித்தது.

    விழுப்புரம் மாவட்டத்தில் 12 தியேட்டர்களில் தர்பார் படம் ரிலீஸ் ஆனது. விழுப்புரத்தில் மட்டும் 4 திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. காலை 6 மணி அளவில் ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டது. இதனை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து பார்த்தனர்.

    விழுப்புரம் ரங்கநாதன் சாலையில் உள்ள தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் பொங்கல் பண்டிகையொட்டி படம் பார்க்க வந்திருந்த பொதுமக்களுக்கு கரும்பு மற்றும் இனிப்புகள் வழங்கினர். இதனை விழுப்புரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற தலைவர் எத்திராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஜெயராமன், ஒன்றிய செயலாளர் பிரபு, மாவட்ட விவசாய அணி செயலாளர் மணிவண்ணன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் காலை 6 மணி முதல் தர்பார் திரைப்படம் திரையிடப்பட்டது. இதில் ரசிகர்கள் காட்சி காலை 6 மணிக்கு கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.

    கடலூர் வடக்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் பொறியாளர் ரவி தலைமையில் நிர்வாகிகள் ரஜினி பிரபாகர், ரஜினி மூர்த்தி, தட்சிணாமூர்த்தி, தாயுமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் தியேட்டர் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

    இதனைத்தொடர்ந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் தியேட்டருக்குள் சென்றனர். அங்கு படம் வெளியிடப்பட்டபோது ரசிகர்கள் சினிமா தொடங்கிய போது கலர் பேப்பர்களை தூவி ஆரவாரத்துடன் படத்தை பார்த்தனர்.
    Next Story
    ×