search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரோ
    X
    இஸ்ரோ

    சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் - விஞ்ஞானிகள் தகவல்

    2020-ம் ஆண்டில் சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
    சென்னை:

    சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 செயற்கைகோள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

    இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 2019-ம் ஆண்டு பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதனை படைத்து உள்ளது. இந்த சாதனைகள் தொடரும் வகையில், 2020-ம் ஆண்டு பல்வேறு புதிய பயணங்களை செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் 10-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    இந்த பட்டியலில் மேம்பட்ட தகவல் தொடர்பு செயற்கைகோள்களான ‘ஜிசாட்-1’ மற்றும் ‘ஜிசாட்-2’ ஆகியவை அடங்கும். கூடுதலாக, பூமியின் கண்காணிப்பு செயற்கைகோள்கள் ரீசாட்- 2 பிஆர்-2 மற்றும் கண்காணிப்புக்கான ‘மைக்ரோசாட்’ ஆகியவையும் விண்ணில் ஏவப்பட உள்ளது.

    சூரியன்

    2020-ம் ஆண்டின் நடுப்பகுதியில் ஆதித்யா-எல்1 என்ற சூரியனை ஆய்வு செய்யும் செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுகிறது. ஆதித்யா-எல்1 திட்டம் சூரியனை ஆராய்வதற்கான இந்தியாவின் முதல் பணியாகும். இதை விண்ணுக்கு எடுத்து செல்ல 400 கிலோ பி.எஸ்.எல்.வி ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்த ராக்கெட் 6 விஞ்ஞான ஆராய்ச்சி செயற்கைகோள்களை சுமந்து செல்ல உள்ளது. அவை பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ‘லக்ரான்ஜியன் புள்ளி’ 1 (எல்-1)-யை சுற்றி உள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வின் போது எந்தவொரு கிரகணமும் இல்லாமல் சூரியனை துல்லியமாக ஆராய முடியும் என கண்காணிக்கப்படுகிறது. இது இஸ்ரோவுக்கு ஒரு பெரிய வெற்றியை அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த ஆண்டு இஸ்ரோவிற்கு அரசு வழங்கவுள்ள பட்ஜெட் சுமார் ரூ.666 கோடியாகும். சந்திரயான்-3 புத்தாண்டில் விண்ணில் ஏவப்படுகிறது. சந்திரயான்-3 திட்டத்தில் லேண்டர், ரோவர் மற்றும் கூடுதல் எரிபொருள் ஏற்றிச் செல்ல ஒரு பாகமும் இருக்கும். இதற்கான ரூ.75 கோடியில் ரூ.60 கோடி, சந்திரயான் 3-க்குத் தேவையான கருவிகள், பாகங்கள் வாங்குவதற்கும், ரூ.15 கோடி மற்ற செலவுகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

    டிசம்பரில் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் திட்டமான ககன்யானின் முதல் ஆளில்லா சோதனை ராக்கெட்டையும் ஏவ திட்டமிட்டு உள்ளோம். ஆர்.எல்.வி. என்று அழைக்கப்படும் சிறிய வகை செயற்கைகோள்கள் செலுத்தும் கருவியையும் விண்ணில் ஏவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    மனிதனை விண்ணிற்கு அனுப்பும் திட்டம் ரூ.8.6 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. ரூ.12 கோடி சிறிய செயற்கைகோள்கள் சிலவற்றை விண்ணிற்கு எடுத்துச் செல்லப்படும் வாகனத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வு 2021-2022-ம் ஆண்டு செயல்படுத்தப்படும். அதேபோல் இந்த விண்கலன்களை ஏவத்தேவையான ஏவுதளத்தை உருவாக்க ரூ.120 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.

    Next Story
    ×