search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    வில்லியனூர் அருகே மதுபழக்கத்தை மனைவி கண்டிப்பு- சமையல் தொழிலாளி தற்கொலை

    வில்லியனூர் அருகே மதுபழக்கத்தை மனைவி கண்டித்ததால் சமையல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே கூடப்பாக்கம் சுபலட்சுமி நகரை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது56). இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும் 2 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஆதிமூலம் சென்னையில் ஒரு வீட்டில் தங்கி சமையலராக வேலைசெய்து வந்தார்.

    இவர் விடுமுறையில் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அளவுக்கு அதிகமாக மதுகுடித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

    அதுபோல் நேற்றும் ஆதிமூலம் விடுமுறையில் வீட்டுக்கு வந்த போது அதிகமாக மதுகுடித்துவிட்டு வந்தார். இதனை அவரது மனைவி தனலட்சுமி கண்டித்தார்.

    இதனால் மனமுடைந்த ஆதிமூலம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் குளியல் அறையில் உள்பக்கமாக பூட்டிக்கொண்டு அவர் வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×