search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இருமாநில அதிகாரிகளிடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை.
    X
    இருமாநில அதிகாரிகளிடையே நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தை.

    நதிநீர் பிரச்சனை- சென்னையில் தமிழக-கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    நதிநீர் பிரச்சனையை தீர்க்கும் வகையில் தமிழகம் மற்றும் கேரளா சார்பில் அமைக்கப்பட்ட குழுக்கள் சென்னையில் இன்று முதற்கட்ட பேச்சு வார்த்தை தொடங்கியது.

    சென்னை:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த செப்டம்பர் 25-ந் தேதி கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேசினார்.

    இருமாநில நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வகையில், பல்வேறு விசயங்கள் இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்த இரு மாநிலத்திலும் செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பரம்பிகுளம் ஆழியாறு திட்டம் குறித்த குழுவில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், காவேரி தொழில்நுட்பக் குழுமத் தலைவர் ஆர்.சுப்பிர மணியன், பொதுப்பணித் துறையின் ஓய்வு பெற்ற சிறப்பு தலைமைப் பொறியாளர் டாக்டர் ஆர்.இளங்கோவன், உட்பட்டோர் இடம் பெற்றி ருந்தனர்.

    அதே போல பாண்டியாறுபுன்னபுழா திட்டத்திற்கான குழுவில் க.மணிவாசன், ஆர்.சுப்பிரமணியன், ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் ஈ.தமிழரசன், கண்காணிப்புப் பொறியாளர் எஸ்.சிவலிங்கம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    அதேபோல கேரளாவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரு மாநில குழுக்களும் சென்னையில் இன்று பேச்சுவார்த்தையை தொடங்குவதாக அறிவித்திருந்தது.

    அதன்படி இன்று சென்னையில் தமிழ்நாடு கேரளா மாநிலங்களுக்கு இடையேயான பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் குறித்து அமைக்கப்பட்ட குழுக்களின் முதல் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.மணிவாசன், கேரள அரசின் நீர்வள ஆதாரத்துறை செயலாளர் டாக்டர். பி. அசோக் மற்றும் இரு மாநில குழு உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×