search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேசன் அரிசி
    X
    ரேசன் அரிசி

    சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி கார்டாக மாற்ற இன்று கடைசி நாள்

    சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டாக மாற்ற இன்று தான் கடைசி நாள். இணைய தள முகவரியை கொண்டு செல்போன் மூலமும் சர்க்கரை கார்டை அரிசி கார்டாக எளிதாக மாற்ற முடியும்.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. அரிசி வாங்குவோருக்கு தனி ரேசன் கார்டும், சர்க்கரை வாங்குவோருக்கு தனி ரேசன் கார்டும் வழங்கப்பட்டுள்ளது.

    சர்க்கரை கார்டு வைத்திருப்போர் அதை அரிசி கார்டாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. கடந்த 26-ந்தேதி வரை மாற்றம் செய்யலாம் என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில், சர்க்கரை கார்டை அரிசி கார்டாக மாற்றிக்கொள்ளும் அவகாசம் 29-ந்தேதி (இன்று) வரை நீடிக்கப்படுவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்தார். அதன்படி,   
    www.tnpds.gov.in
       என்ற இணையதள முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர்களிடமும், குடும்ப அட்டை நகலை இணைத்து சமர்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழ்நாட்டில் தற்போது 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை அட்டைகள் உள்ளன. அரிசி அட்டையாக இதை மாற்றம் செய்ய விரும்புவோர் சம்பந்தப்பட்ட ரே‌ஷன் கடைகளிலும் விண்ணப்பங்களை நேரடியாக வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட இணைய தள முகவரியை கொண்டு செல்போன் மூலமும் சர்க்கரை கார்டை அரிசி கார்டாக எளிதாக மாற்ற முடியும்.

    எடப்பாடி பழனிசாமி

    இந்த ஆண்டு அரிசி கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். எனவே, அரிசி கார்டாக மாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

    சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டாக மாற்ற இன்று தான் கடைசி நாள். ஆகவே, இன்று அரிசி கார்டுக்கு மாறுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×