search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன்மாதிரி பங்குதாரர்கள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன்மாதிரி பங்குதாரர்கள் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் காலியிடங்களுக்கு நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்

    பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் உள்ள காலியிடங்களுக்கு நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று முன்மாதிரி பங்குதாரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
    மங்களமேடு:

    பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் முன்மாதிரி பங்குதாரர்கள் கூட்டம், ஆலையின் தலைமை நிர்வாகி ஜெய்னுலாப்தீன் தலைமையில் நடந்தது. சர்க்கரைக் கழக பொது மேலாளர் விஜயா, செயலாளர் ராஜகோபால், தலைமை பொறியாளர் பிரபாகரன், தலைமை கரும்பு அலுவலர் மாமுண்டி முன்னிலை வகித்தனர். 2015-16, 2016-17-ம் ஆண்டைய அரவை பருவத்திற்கு அரசு அறிவித்த விலை டன் ஒன்றுக்கு ரூ.2,750. இதில் ரூ.2,300 மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. பாக்கி தொகை டன்னுக்கு ரூ.450-ஐ வரும் பேரவை கூட்டத்திற்குள் அரசு வழங்க வேண்டும். பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு, தற்காலிக பணியாளர்களை நியமித்து ஆலையை பெறும் ந‌‌ஷ்டத்திற்கு உள்ளாக்கும் நிலையை மாற்றி, நிரந்தர பணியாளர்களை உடனே நியமிக்க வேண்டும். ஆலையில் இணை மின் திட்டத்திற்கு விவசாயிகளிடம் பெறப்பட்ட பணத்திற்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் பங்குப்பத்திரமாக அடுத்த பேரவைக் கூட்டத்திற்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

    அரவை பருவத்தில் மட்டும் மின் உற்பத்தி செய்யும் நிலையை மாற்றி ஆண்டு முழுவதும் மின் உற்பத்தியை செய்ய வேண்டும். வெட்டிய கரும்பை ஆலை வளாகத்தில் எடை போட்டவுடன் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு குறுஞ்செய்தி தகவலை அனுப்பும் இணையதள வசதியை உடனே ஏற்படுத்த வேண்டும். நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.210 கோடியை, ரூ.10 மதிப்புள்ள ரூ.21 கோடி பங்குகளாக உயர்த்த அரசு எடுத்திருக்கும் முடிவை இந்தக் கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த பங்குத் தொகையை விவசாயிகளின் பங்காக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூட்டத்தில் கலந்து கொண்ட தபங்குதாரர்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

    கூட்டத்தில் பங்குத்தாரர்கள் முற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×