search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி
    X
    அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சி

    அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு

    அருணாசலேஸ்வரர் கோவிலில் கட்டுப்பாட்டு அறை அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சக்தி விலாஸ் மண்டபம் உள்ளது. இதில் விசே‌‌ஷ நாட்கள் மற்றும் விழா நாட்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின் போது சக்தி விலாஸ் மண்டபத்தில் போலீசார் சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருந்தது.

    இந்த ஆண்டும் தீபத்திருவிழாவின் போது அதே இடத்தில் போலீசார் மூலம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது. இதனால் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுவதில் சிக்கல்கள் மற்றும் இடையூறுகள் ஏற்படுவதாக கோவில் இணை ஆணையர் ஞானசேகரனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பனிந்தர்ரெட்டி, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமுண்டீஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் திருமகள், அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கட்டுப்பாட்டு அறை அமைப்பதினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், கட்டுப்பாட்டு அறையை வேறு இடத்திற்கு மாற்ற முடியுமா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
    Next Story
    ×