search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணிநியமன ஆணையுடன் லாவண்யா தனது தாயுடன் போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரணை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    X
    பணிநியமன ஆணையுடன் லாவண்யா தனது தாயுடன் போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரணை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    கோவையில் கொலை செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு மகளுக்கு தாசில்தார் அலுவலகத்தில் வேலை

    கோவையில் கொலை செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு மகளுக்கு தாசில்தார் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலெக்டர் ராஜாமணி பிறப்பித்தார்.
    கோவை:

    கோவையை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கோவை மாநகர போலீசில் ஏட்டாக பணியாற்றினார். கடந்த 1997-ம் ஆண்டு கோவையில் சிலரால் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்திற்கு பின்பு தான் கோவையில் பல இடங்களில் குண்டுகள் வெடித்தது. போலீஸ் ஏட்டு கொலை செய்யப்பட்ட போது அவருக்கு பிறந்து சில மாதங்களே ஆன லாவண்யா என்ற பெண் குழந்தை இருந்தது.

    அந்த பெண்ணுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது லாவண்யாவுக்கு 21 வயது முடிந்து விட்டதால் கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலெக்டர் ராஜாமணி பிறப்பித்தார்.

    இதனை தொடர்ந்து லாவண்யா நேற்று பணியில் சேர்ந்தார். பின்னர் அவர் தனது தாயுடன் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரணை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
    Next Story
    ×