search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை (கோப்புப்படம்)
    X
    கொலை (கோப்புப்படம்)

    ஆலங்குளம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை

    ஆலங்குளம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டை தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் நம்பிராஜன்(வயது30). மாரியம்மாள் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரை சேர்ந்தவர்.

    நம்பிராஜன் வேலைக்கு செல்லாமல் அப்பகுதியில் சுற்றிதிரிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நம்பி ராஜனை அவரது தாய் மாரியம்மாள், மருதம்புத்தூரில் வசிக்கும் தனது அண்ணன் ஆதிமூலத்தின் வீட்டில் சிறிது காலம் தங்கியிருந்து வேலை பார்த்து வருமாறு கூறியுள்ளார்.

    இதையடுத்து நம்பிராஜனும் கடந்த 2 வருட காலமாக தனது தாய் மாமா ஆதிமூலம் வீட்டில் தங்கியிருந்து அவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்து வந்தார். இந்தநிலையில் நம்பிராஜனுக்கும், ஆதிமூலத்தின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த ஆதிமூலம் இருவரையும் பலமுறை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்கள் இருவரும் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் அவர்கள் மீது ஆதிமூலம் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி ஆலங்குளம் ஜோதிநகரில் ஆதிமூலத்துக்கு சொந்தமான ஆட்டுக்கிடையில் நம்பிராஜன் இருந்தார்.

    இதனை அறிந்து ஆதி மூலம் அங்கு சென்று தனது மனைவியுடமான கள்ளக்காதலை கைவிடுமாறு நம்பிராஜனிடம் கூறியுள்ளார். ஆனால் நம்பிராஜன் அதை மறுத்ததால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஆதிமூலம் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் நம்பிராஜனை சரமாரி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    அதில் காயமடைந்து மயங்கிய நிலையில் கிடந்த நம்பிராஜனை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அது குறித்து ஆலங்குளம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். விசாரணையில் நம்பிராஜனை இரும்பு கம்பியால் தாக்கியது அவரது தாய் மாமா ஆதிமூலம் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை ஆலங்குளம் போலீசார் கைது செய்து கொலை செய்ய முயன்றதாக வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நம்பி ராஜன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனால் ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×