search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
    X
    திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

    செங்குன்றம் போலி டாக்டருக்கு 6 ஆண்டு ஜெயில்- திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

    செங்குன்றம் போலி டாக்டருக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    திருவள்ளூர்:

    செங்குன்றம் அருகே உள்ள பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் கிளினிக் நடத்தி வந்தவர் மதியாஸ். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

    அவர் முறையான தகுதி இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி மதியாசை கைது செய்தனர்.

    அவர் மருத்துவ சிகிச்சை தொடர்பாக சில படிப்புகள் மட்டும் படித்துவிட்டு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. இது தொடர்பான வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் நடந்து வந்தது.

    இந்த வழக்கின் விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் முறையான மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்த மதியாசுக்கு 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    Next Story
    ×