search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்.இ.டி. விளக்குகள் அகற்றப்பட்ட காட்சி.
    X
    எல்.இ.டி. விளக்குகள் அகற்றப்பட்ட காட்சி.

    அரூரில் இருசக்கர மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்ட எல்.இ.டி. விளக்குகள் உடைப்பு

    அரூரில் எல்.இ.டி. விளக்குகள் அதிக ஒளியை உமிழ்வதால் விபத்துகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் புதுப்பித்தலுக்கு வருபவர்களிடம் இதை அகற்ற கோரி அறிவுரை வழங்கினார்.
    அரூர்:

    தற்போது இருசக்கர மோட்டார் சைக்கிளில் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலானோர் இதுபோன்ற விளக்குகளை தங்கள் வாகனங்களில் பொருத்திக் கொள்கின்றனர்.

    இதுபோன்ற எல்.இ.டி. விளக்குகள் அதிக ஒளியை உமிழ்வதால் எதிரே வருபவர்களுக்கு இரண்டு நொடி பார்வை தெரியாமல் ஏற்பட்டு விபத்துகள் அதிகம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் வாகன புதுப்பித்தலுக்கு வருபவர்களிடம் எல்.இ.டி. விளக்குகளை அகற்றுமாறு அறிவுரைகளை வழங்கி வந்தார். 

    இதனையடுத்து மோட்டார் வாகன அலுவலகம் முன்பு தணிக்கையில் ஈடுபட்ட போது அந்த வழியாக எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களை நிறுத்தி வண்டி உரிமையாளர்களிடமே சுத்தியலை கொடுத்து விளக்குகளை உடைக்க சொன்னார். இதுபோல் 8 வாகனங்களின் எல்.இ.டி. விளக்குகள் உடைக்கப்பட்டது.
    Next Story
    ×