என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடுத்த கடனை திருப்பி தராததால் கூட்டுறவு வங்கி பெண் ஊழியர் மீது தாக்குதல்
Byமாலை மலர்23 Oct 2019 2:55 PM GMT (Updated: 23 Oct 2019 2:55 PM GMT)
வீராம்பட்டினத்தில் கொடுத்த கடனை திருப்பி தராததால் கூட்டுறவு வங்கி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பாகூர்:
வீராம்பட்டினம் தேரோடும் வீதியை சேர்ந்தவர் வாசு (வயது40), மீனவர். இவரது மனைவி கலைவாணி (37). இவர் முதலியார்பேட்டையில் உள்ள கூட்டுறவு வங்கியில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவர் 2010-ம் ஆண்டில் பனித்திட்டை சேர்ந்த தனபதி என்பவரிடம் ரூ.15 லட்சம் கடனாக பெற்றார்.
இதையடுத்து 2 தவனையாக கலைவாணி ரூ. 10 லட்சம் தளபதிக்கு கொடுத்துள்ளார். மீதி பணத்தை கொடுக்காமல் கலைவாணி காலம் கடத்தி வந்தார். இந்த நிலையில் பனித்திட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கலைவாணி வந்திருந்தார். அப்போது வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த கலைவாணியை பணம் கடன் கொடுத்த தனபதியும் அவரது மகன் ஜெனிஷ் (21)-ம் சேர்ந்து தரக்குறைவாக திட்டினர். பின்னர் கையாலும், தடியாலும் கலைவாணியை தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் காயம் அடைந்த கலைவாணி கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்வந்திரி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×