
திருப்பூரில் விபத்தை குறைக்கவும் விபத்தால் உயிரிழப்பை தடுக்கவும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அவரது உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர் முழுவதும் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஒருவாரமாக 30-க்கும் மேற்பட்ட குடிபோதையில் மற்றும் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதில் வடக்கு மற்றும் தெற்கு போலீசில் பதிவு செய்யப்பட்ட குடிபோதையில் வாகனம் ஓட்டிய 9 பேருக்கு ரூ.95 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து திருப்பூரில் இதுபோன்ற வாகன சோதனைகள் நடத்தி விபத்தில்லா திருப்பூரை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.