search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஸ்பெண்டு
    X
    சஸ்பெண்டு

    போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் 22 ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியர் சஸ்பெண்டு

    கரூரில் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் 22 ஆண்டுகளாக பணியாற்றிய ஆசிரியரை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
    கரூர்:

    கரூர் பெரிய வடுகப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் கடந்த 1997-ம் ஆண்டு முதல் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த இவர், இட ஒதுக்கீடு மூலம் பணியில் சேர, தாழ்த்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த சான்றிதழ் ஒன்றை போலியாக தயார் செய்து கொடுத்து பணியில் சேர்ந்ததாக, மனித உரிமை ஆணையத்திடம் ஒருவர் புகார் செய்திருந்தார்.

    அந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்தும்படி, கரூர் மாவட்ட கலெக்டருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து கலெக்டர், கரூர் மாவட்ட கல்வி அதிகாரி சிவராமன் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    அதன்படி கல்வி அதிகாரி சிவராமன் விசாரணை நடத்தியதில், கண்ணன், போலியாக தாழ்த்தப்பட்டோர் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரிய வந்தது. இதையடுத்து கண்ணனை சஸ்பெண்டு செய்து சிவராமன் உத்தரவிட்டார்.

    போலியான சான்றிதழை கொடுத்து 22 ஆண்டுகள் ஆசிரியர் பணியாற்றிய சம்பவம் கல்வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×