search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி அலுவலகம்
    X
    டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தமிழை புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை - தேர்வாணைய செயலாளர்

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தமிழை புறக்கணித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் கூறியுள்ளார்.

    சென்னை:

    குரூப்-2 தேர்வு தொடர்பாக சென்னையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் (டி.என். பி.எஸ்.சி.) நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் எப்போதெல்லாம் முதன்மை எழுத்து தேர்வு இருந்துள்ளதோ, அப்போதெல்லாம் பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் என்று முதல்நிலை தேர்வில் இருந்ததில்லை. அதுதான் திருப்பி வந்துள்ளது.

    கிராமப்புற மாணவர்களுக்கும், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் இந்த முறையினால் நிச்சயம் நன்மைதான் ஏற்படும்.

    தமிழ்மொழியில் படித்த எந்த மாணவரும், கிராமப்புற மாணவரும் பாதிக்கப்படுவார்கள் என அச்சப்படத் தேவையில்லை.

    இந்த புதிய முறையினால் தமிழ் படிக்கத் தெரியாதவர் தமிழில் எழுத தெரியாதவர் தேர்ச்சி பெற இயலாது என்ற நிலை கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இருக்கும் முறையை பொறுத்தவரை, முதன் நிலை தேர்வில் பொது அறிவு பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் தேர்ந்தெடுக்கலாம்.

    தமிழை சுத்தமாக தெரியாத ஒரு மாணவர் கூட பொது அறிவும், பொது ஆங்கிலமும் எடுத்து இறுதி வரை தேர்ந்தெடுக்கப்படும் நிலை இருந்தது. தற்போது கட்டாயம் தமிழ் படிக்க எழுத தெரிந்த மாணவர்கள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் தெரியாத மாணவர்கள் இறுதி தேர்வு வரை வருவதற்கு, தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பொது ஆங்கிலத்தை தேர்ந்தெடுப்பவர்கள் தமிழ் சுத்தமாக தெரியாமல் இறுதி வரை வந்து பணியிலும் சேருவதற்காக வாய்ப்பு இருந்து வந்தது. அதனை தற்போது மாற்றி அமைத்துள்ளோம். அந்த வகையில் முதன் நிலை தேர்வில் 2 பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு சம்பந்தமாக வரலாறு, பண்பாடு, இலக்கியம் குறிப்பாக சங்க இலக்கியம்முதல் இக்கால இலக்கியம் வரை திருக்குறளுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    எனவே தமிழில் படித்த கிராமப்புற மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×