search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகவதியப்பன்
    X
    பகவதியப்பன்

    பத்ரிநாத் யாத்திரை சென்ற களக்காடு பக்தர் உயிரிழப்பு

    பத்ரிநாத் யாத்திரை சென்ற பக்தர் மலையேறும்போது மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    களக்காடு:

    களக்காடு ஜவஹர் வீதியை சேர்ந்தவர் பகவதியப்பன் என்ற ஐயப்பன் (வயது 52). இவருக்கு ராஜேஸ்வரி (48) என்ற மனைவியும், நம்பிராஜன் (20) என்ற மகனும், பொன்மாரி (17) என்ற மகளும் உள்ளனர். நம்பிராஜன் டிப்ளமோ படித்துள்ளார். பொன்மாரி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். பகவதியப்பன் வள்ளியூர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணி புரிந்து வந்தார்.

    இந்நிலையில் சிவ பக்தரான இவர் தனது நண்பர்களுடன் கடந்த 4-ந்தேதி உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் சிவன் கோவிலுக்கு புனித யாத்திரை புறப்பட்டார். ரெயில் மூலம் கடந்த 14-ந்தேதி இரவில் பத்ரிநாத் கோவிலுக்கு செல்வதற்காக மலையில் ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது பகவதியப்பனுக்கு திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் நடக்க முடியாமல் சிரமப்பட்ட அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

    இதுகுறித்து அங்குள்ள தானா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதன் பின் அவரது உடலை மீட்டு, ஜோசிமாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பகவதியப்பன் உயிரிழந்தது குறித்து களக்காட்டில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பத்ரிநாத் யாத்திரை சென்ற பக்தர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே பகவதியப்பன் உடலை களக்காட்டிற்கு கொண்டு வர அவரது குடும்பத்தினர் பணம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே அவரது உடலை சொந்த ஊரான களக்காட்டிற்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    Next Story
    ×