என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தங்கம் விலை சரிவு தங்கம் விலை சரிவு](https://img.maalaimalar.com/Articles/2019/Sep/201909101157383772_Gold-rate-decreased-by-Rs112-per-sovereign_SECVPF.gif)
X
தங்கம் விலை சரிவு
தங்கம் விலை மேலும் குறைந்தது- ஒரு சவரனுக்கு 112 ரூபாய் சரிவு
By
மாலை மலர்10 Sep 2019 6:27 AM GMT (Updated: 10 Sep 2019 6:27 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 112 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.29,160 என்ற அளவில் உள்ளது.
சென்னை:
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச அம்சங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த மாத துவக்கத்தில் இருந்தே கடுமையாக உயர்ந்தது. ஒரு மாத இடைவெளியில் சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்தது. கடந்த 4-ம் தேதி சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது.
அதன்பின்னர், தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.29272 என்ற நிலையில் சரிந்திருந்தது. ஒரு கிராம் ரூ.3659 ஆக இருந்தது.
![தங்கம் தங்கம்](https://img.maalaimalar.com/InlineImage/201909101157383772_1_gold._L_styvpf.jpg)
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 112 ரூபாய் சரிந்து, ஒரு சவரன் ரூ.29,160 என்ற அளவில் விற்பனை ஆனது. ஒரு கிராம் ரூ.3645க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்மூலம் தங்கத்தின் விலை கடந்த 6 நாட்களில் சவரனுக்கு 960 ரூபாய் குறைந்திருக்கிறது.
இதேபோல் வெள்ளி விலை கிலோ 54 ஆயிரத்து 800 ரூபாய் வரை உயர்ந்து, அதன்பின்னர் படிப்படியாக சரியத் தொடங்கியது. இன்று கிலோவுக்கு மேலும் 200 ரூபாய் சரிந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.50 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் 50 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.
பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் சர்வதேச அம்சங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை கடந்த மாத துவக்கத்தில் இருந்தே கடுமையாக உயர்ந்தது. ஒரு மாத இடைவெளியில் சவரனுக்கு 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்தது. கடந்த 4-ம் தேதி சவரன் ரூ.30 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. இதேபோல் வெள்ளி விலையும் கணிசமாக உயர்ந்தது.
அதன்பின்னர், தங்கத்தின் விலை படிப்படியாக குறையத் தொடங்கியது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.29272 என்ற நிலையில் சரிந்திருந்தது. ஒரு கிராம் ரூ.3659 ஆக இருந்தது.
![தங்கம் தங்கம்](https://img.maalaimalar.com/InlineImage/201909101157383772_1_gold._L_styvpf.jpg)
இதேபோல் வெள்ளி விலை கிலோ 54 ஆயிரத்து 800 ரூபாய் வரை உயர்ந்து, அதன்பின்னர் படிப்படியாக சரியத் தொடங்கியது. இன்று கிலோவுக்கு மேலும் 200 ரூபாய் சரிந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.50 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் 50 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை ஆகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)