search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தஞ்சை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

    தஞ்சை மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை பெய்தது. தஞ்சையில் உள்ள அனைத்து வடிகாலையும் முறையாக தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பகலில் வெயில் அடிப்பதும் மாலையில் மழை பெய்வதுமாக உள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. தஞ்சையில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்தது. மாலை 5 மணியளவில் திடீரென வானத்தில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் குளிர்ந்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டாறே மெதுவாக ஊர்ந்து சென்றனர். தாழ்வான பகுதிகளில் இருக்கும் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றது. தஞ்சையில் நேற்று ஒரே நாளில் 18 மி.மீ. மழை அளவு பதிவானது. இதேப்போல் ஒரத்தநாடு, பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது.

    தஞ்சை தெற்கு வீதியில் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து வீதியில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. காமராஜர் மார்க்கெட்டிற்கு செல்லும் 2 வழிகளில் அய்யங்கடை தெருவில் கழிவு நீரும், மழைநீரும் தேங்கி நின்றது. மேலும் அந்த பகுதியில் உள்ள சில வீடுகள், கடைகளுக்கும் கழிவுநீர் புகுந்தது.

    இதனால் மார்க்கெட்டிற்கு வந்த பொதுமக்கள் கழிவுநீரில் நடந்து செல்லக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டனர். தஞ்சை நகரில் உள்ள அனைத்து வடிகாலையும் முறையாக தூர்வார வேண்டும், கழிவுநீர் தெருவில் செல்வதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    Next Story
    ×