என் மலர்

  செய்திகள்

  கார் தீப்பற்றி எரிந்த காட்சி.
  X
  கார் தீப்பற்றி எரிந்த காட்சி.

  நாகர்கோவில் அருகே சிலிண்டர் வெடித்து கார் தீப்பிடித்து எரிந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகர்கோவில் அருகே சிலிண்டர் வெடித்து கார் தீப்பிடித்து எரிந்ததில் 2 வாலிபர்கள் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினர்.
  என்.ஜி.ஓ. காலனி:

  நாகர்கோவில் அருகே உள்ள வல்லன்குமாரன் விளையைச் சேர்ந்தவர் சிவா (வயது 24). இவரது நண்பர் வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த ஜோசப் (23).

  இவர்கள் 2 பேரும் நேற்று நள்ளிரவு கியாஸ் மூலம் இயங்கும் ஆம்னி கார் ஒன்றில் மணக்குடியில் இருந்து மேலகிருஷ்ணன் புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். தெங்கம்புதூர் அருகே உள்ள மாலையணிந்தான் குடியிருப்பு பகுதியில் வந்தபோது டயர் திடீரென வெடித்து கார் நிலைதடுமாறி தாறுமாறாக ஓடியது.

  பின்னர் ரோட்டோரம் நின்ற மின் கம்பத்தில் கார் மோதி நின்றது. காரில் இருந்த சிவா மற்றும் ஜோசப் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் காரில் இருந்து வெளியே வந்த சில நிமிடங்களில் காரில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் கார் தீப்பற்றி எரிந்தது.

  இதுபற்றி நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருந்தாலும் கார் தீப்பிடித்து முற்றிலும் சேதம் அடைந்தது.

  அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 2 பேரும் வெளியே வந்த பிறகு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இல்லாவிட்டால் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும்.

  காயம் அடைந்த 2 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  Next Story
  ×