என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  கும்மிடிப்பூண்டி அருகே சிறுமிகளை வைத்து விபசாரம்- பெண் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கும்மிடிப்பூண்டி அருகே சிறுமிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

  கும்மிடிப்பூண்டி:

  கும்மிடிப்பூண்டியை அடுத்த மாநெல்லூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் இந்து. இவர் மீது ஏற்கனவே பல வழிப்பறி வழக்குகள் உள்ளன.

  தற்போது அவர் வீட்டிலேயே சிறுமிகளையும், பெண்களையும் வைத்து விபசாரம் செய்து வருவதாக கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் வந்தது.

  இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி சப்-இன்ஸ்பெக்டர் மாரி முத்து தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் வாடிக்கையாளர்கள் போல் இந்து வீட்டிற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.

  அப்போது அங்கு 15 மற்றும் 18 வயது கொண்ட 2 சிறுமிகள், 25 வயது மதிக்கத்தக்க சென்னையைச் சேர்ந்த கணவரிடம் இருந்து பிரிந்து வந்த பெண் ஒருவர் என மொத்தம் 3 பேரை வீட்டில் தங்க வைத்து இந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

  இதனையடுத்து 2 சிறுமிகளையும் மீட்டு திருவள்ளூர் மாவட்ட “சைல்டு ஹெல்ப் லைன்” அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். சென்னையைச் சேர்ந்த பெண்ணை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர். இந்து மீது போலீசார் விபசார வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×