என் மலர்

  செய்திகள்

  மினி மாரத்தான் போட்டியில் பங்கு பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்கள்
  X
  மினி மாரத்தான் போட்டியில் பங்கு பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்கள்

  மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் அருகே உள்ள ஆவுடையாபுரம் ஆறுமுகம் பிள்ளை சாலையில் ராம்கோ குழுமத்தின் சார்பாக மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.
  விருதுநகர்:

  விருதுநகர் அருகே உள்ள ஆவுடையாபுரம் ஆறுமுகம் பிள்ளை சாலையில் ராம்கோ குழுமத்தின் சார்பாக மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. 800-க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் இதில் பங்கேற்றனர். இதில் 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 10 கி.மீ. தூரமும், 13 முதல் 18-வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 5.கி.மீ. தூரமும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. போட்டியில் பங்கேற்றவர்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கி ஒவ்வொரு பிரிவாக ஓடினர். ராம்கோ நிறுவனத்தின் மூத்த துணைத்தலைவர் ராமலிங்கம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

  மூத்த பொதுமேலாளர் ராமசுப்பிரமணியம், பொதுமேலாளர்கள் மணிகண்டன், ஜெகதீஸ் பாபு, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த வெற்றியாளர்களுக்கு கலெக்டர் கையொப்பம்மிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டன, போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பில் பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. 
  Next Story
  ×