என் மலர்

  செய்திகள்

  நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து குடிநீர், குளிர்பானங்கள் விற்க தடை
  X

  நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து குடிநீர், குளிர்பானங்கள் விற்க தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து குடிநீர், குளிர்பானங்கள் விற்்க தடைசெய்யவும், இதனை அனைத்து கடைகளிலும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
  ஊட்டி:

  நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு உள்ள குளிர்பானங்கள் மற்றும் உணவு பொருட்களுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்ட குடிநீர், பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதை, நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து கடைகளிலும் உடனடியாக அமல்படுத்துவது, நீலகிரி முழுவதும் அமல்படுத்த கோர்ட்டில் கால அவகாசம் கோருவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக இன்று (புதன்கிழமை) அனைத்து வியாபார, வணிக, உணவகங்கள் மற்றும் தொடர்புடைய சங்க நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவும் முடிவு செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு உத்தவினை நடைமுறைப்படுத்தும் வகையில், நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பானங்கள் மற்றும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை எடுத்து வர வேண்டாம்.

  நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளில் மேற்கண்ட பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம். மேலும் மறுசுழற்சி செய்யக்கூடிய பாட்டில்கள் மற்றும் கேன்களை குடிநீர் பாட்டில்களுக்கு மாற்று பொருளாக பயன்படுத்த தெரிவிக்கப்படுகிறது. நீலகிரியில் நெடுஞ்சாலைகள், சுற்றுலா தலங்கள், பொது இடங்களில் சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில், சுத்திகரிக்கும் குடிநீர் கருவிகளை பொருத்தவும், அடுத்த கட்டமாக அனைத்து இடங்களுக்கும் விரிவாக்கம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

  நீலகிரி முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், தற்போது அதற்கு மாற்றுப்பொருளாக படலம் கப்(பாயில் கப்) மற்றும் சோளமாவு கப் உபயோகத்தில் உள்ளதாக சோதனையில் தெரியவந்தது. இவை உடல் நலத்துக்கு அதிக தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதால், படலம் கப் மற்றும் பிளாஸ்டிக் கலந்த சோளமாவு கப் பயன்படுத்த நீலகிரி மாவட்டம் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
  Next Story
  ×